பாட்டியை பலாத்காரம் செய்த காமகொடூரன்!


14416

லக்னோ: 75 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது காமகொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அன்டூ பகுதியை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்றிரவு வயலுக்கு சென்றிருக்கிறார். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சஞ்சய் என்ற 25 வயதுடைய வாலிபர் அவரை வழிமறித்து உள்ளார். மேலும், தன் பாட்டி வயதை ஒத்த அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காராம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.

இதை தொடர்ந்து அந்த மூதாட்டி தட்டுத்தடுமாறி அங்கிருந்து நடந்து வந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதை தொடர்ந்து புகாரை பெற்று கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில், அந்த மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கல் நெஞ்சம் படைத்த குற்றவாளி சஞ்சயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.

இந்த கொடூர செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source: Vikatan

Previous தீவிரவாத தாக்குதல் மீண்டும் நடக்கலாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Next தமிழகத்தில் கோயில், கோயிலாக வழிபட்ட சுரேஷ் ரெய்னா!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *