கடும் எதிர்ப்பையும் மீறி நடந்தது தாலி அகற்றும் நிகழ்ச்சி! (படங்கள்)


சென்னை: கடும் எதிர்ப்பையும் மீறி திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

திராவிடர் கழகம் சார்பில் நடக்கும் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியதோடு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறும் திராவிட கழகத்தினரை நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்நீ திமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடக்க விருந்த நிலையில் காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்த தாலி அகற்றும் நிகழ்ச்சியை காலை 7 மணிக்கே திராவிடக்கழகம் தொடங்கி நடத்தி முடித்தது.

திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் தாலியை அகற்றினர். தாலி அகற்றிய பெண்கள் தங்கள் கணவன்கள், பிள்ளைகளோடு வந்திருந்தனர்.

Source: Vikatan

protest

Previous கருத்துரிமை பறிக்கப்படுவதை தடுக்க இணைய சமவாய்ப்பு சட்டம் தேவை: அன்புமணி!
Next கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *