வாட்ஸ்அப் க்ரூப் அட்மின்களே… இந்த அப்டேட் உங்களுக்குத்தான்! #Whatsapp


வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ரசிகரின் கருத்துகளைக் கேட்டுத் தரப்படுகிறது. இந்த அப்டேட்களை பீட்டா வெர்ஷன் 2.17.387 மூலம் செயல்படுத்தப் போகிறது.

வாட்ஸ்அப் குழுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அட்மின்கள் இருக்கும்போது, ஒரு அட்மினை மற்றொரு அட்மின் நீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு அட்மினை நீக்கம் செய்ய முற்படும்போது அதைத் தடுக்கும் புதிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு சோதனையாளராக நீங்கள் புதிய வாட்ஸ்அப் மெசஞ்சர் அப்ளிகேஷனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தச் சோதனைப் பதிவுகளில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இப்போது அதற்கான செயல்பாடுகள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அப்டேட்டுகளுடன் புதிய வசதிகள் வெளியாகும்போது வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் அதிகமானோர் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பைத்தான். இதில் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அளிக்கும் முயற்சியில் இருக்கிறது. அதில் முக்கியமானது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி. நாம் ஒரு நபருக்கோ அல்லது வாட்ஸ்அப் குரூப்களிலோ ஒரு மெசேஜை தவறாக அனுப்பிவிட்டால் அதை ஒன்றும் செய்ய முடியாது. இதற்காக வாட்ஸ்அப்பில் “Delete for Everyone” என்ற சேவை அறிமுகமாக உள்ளது. ஆனால், ஏற்கெனவே இதுபோன்ற வசதி டெலிகிராம், வைபர் போன்ற பிற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வசதி தற்போது ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கிறது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இந்த வசதியைப் பற்றிய தகவல்கள் வெளியாகி வாட்ஸ்அப் பயனாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வசதி மூலமாக அனுப்பிய மெசேஜ்களை எதிரில் இருப்பவர் படிப்பதற்கு முன்பாக அழித்துவிட முடியும். இந்த மெசேஜ்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்து வகையான மெசேஜ்களையும் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக திரும்பப் பெற முடியும்.

மேலும், யூ.பி.ஐ மூலம் பணப்பறிமாற்றத்துக்கும் வாட்ஸ்அப்பில் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி யூ.பி.ஐ மூலம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு பணப்பறிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அப்டேட்கள் தரப்படும். இந்த புதிய வசதியை ‘WhatsApp 2.17.295’ என்ற பீட்டா வெர்ஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு புதிய வசதிகளை அப்டேட் செய்யும் வாட்ஸ்அப்பின் மொத்த பயனாளர்கள் 1.2 பில்லியன் பேரும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளிலும், 10 இந்திய மொழிகளிலும் வாட்ஸ்அப் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Source: Vikatan

Previous “நான் பார்க்காத சோதனையா?” உறவுகளிடம் உருகிய சசிகலா
Next காசிமேட்டில் மீனவர்கள் மறியல்; பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு! போலீஸ் தடியடியால் பதற்றம்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *