இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை உயர்வு இந்தியாவிற்கு ஆபத்தானது: சிவசேனா


sena

மும்பை: இந்தியாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தினரின், மக்கள் தொகை உயர்வு இந்து மக்களுக்கு பெரிதும் ஆபத்தானது என்று சிவசேனா, தனது கட்சி நாளிதழான ‘;சாம்னா’வில் தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சாத்வி தேவா தாகூர் கூறியதற்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவசேனா, அவர் குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்பதை குறிப்பிட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

“மிக விரைவில், இந்தியாவின் இஸ்லாமிய மக்கள் தொகையானது அதிக இஸ்லாமிய மக்களை கொண்ட இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானைவிட அதிகரிக்கும், இதன்விளைவாக இந்துக்களின் நாட்டில் ஒரு கலாச்சார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்” என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

இரண்டு மதங்களின் மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவர, ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை அல்லது குடும்ப கட்டுப்பாடு மட்டுமே தீர்வு ஆகும். எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அக்பருதீன் ஒவாய்சியை குறிப்பிட்டு, “ஒவாய்சி, தனது இஸ்லாமிய சகோதரர்கள் குறித்து கவலை கொண்டு இருந்தால், அவர் இஸ்லாமியர்கள் இடையே குடும்ப கட்டுப்பாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் மற்றும் பெண்களுக்கு புர்கா முறைக்கு ஆதரவு தெரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஒவாய்சிக்கு அறிவுரை வழங்கி உள்ள சிவசேனா, “சிறிய குடும்பம் நல்ல முறையில் சாப்பிடவும் முடியும், வளர்ச்சியும் அடைய முடியும். சிறிய குடும்பம் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும் உறுதி செய்யும்” என்று கூறியுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து இதுபோன்று இஸ்லாமிய மக்கள் தொகையானது வளர்ந்து கொண்டே சென்றால், இது மற்றொரு பாகிஸ்தானை உருவாக்க வழிவகை செய்யலாம், இதனால் எப்போதும் வளர்ந்துவரும் இஸ்லாமிய மக்கள் தொகைக்கு ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கையை வழங்க முடியாது என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்கள் ஏழைகளாக இருப்பதாலே அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம்கானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா, “இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கின்றனர், எனவே அவர்கள் ஏழைகளாக உள்ளனர்,” என்று தெரிவித்துள்ளது.

நாட்டை காப்பாற்ற, குடும்ப கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் எடுத்துரைக்குமாறு இஸ்லாமிய தலைவர்களை சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது.

சிவசேனாவில் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source: Vikatan

Previous உயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும்தானா?
Next பனிமலையில் பலியான மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு உடல் மீட்பு!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *