காசிமேட்டில் மீனவர்கள் மறியல்; பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு! போலீஸ் தடியடியால் பதற்றம்


Chennai: விசைப் படகுகளில் சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் இன்று காலை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சீன இன்ஜின் அகற்றம் காரணமாக இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது தடியடி நடத்திவருகிறார்கள்!

இதனால் ஆவேசமடைந்த மீனவர்கள், அரசுப் பேருந்துகளின்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால், இரண்டு மாநகரப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. போலீஸ் தடியடியால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில் ’சீன எஞ்சின் பயன்பாட்டால் மீன் வளம் அழிந்துவிடும். இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதிவேக சீன எஞ்சின் கொண்ட விசை படகுகளை பயன்படுத்த தடை உள்ளது.

மேலும் மீன்பிடி படகில் 150 குதிரைத் திறன் உள்ள எஞ்சின் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் சிலர் 300ல் இருந்து 500 குதிரைத் திறன் விசைப்படகுகளை பயன்படுத்துகின்றனர்’ என்று குற்றம்சாட்டுகின்றனர்.

Source: Vikatan

Previous வாட்ஸ்அப் க்ரூப் அட்மின்களே... இந்த அப்டேட் உங்களுக்குத்தான்! #Whatsapp
Next ’வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழில் செய்யவைக்கிறார்கள்!’ - திருநங்கைகள் கொந்தளிப்பு

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *