Posts in tag

ஜெயலலிதா


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் விவரங்கள் வருமாறு… ”2016-ம் ஆண்டு, செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.15-க்கு போயஸ் கார்டனிலிருந்து ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை’ என்று தொலைபேசி அழைப்பு வந்ததும், அப்போலோ மருத்துவமனையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றுள்ளது. முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா, மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். அவரைத் தட்டி எழுப்பியபோது, எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவு …

0 1

நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்தோம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் சசிகலாவைத் தவிர வேறு யாரும் உடனிருந்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொன்னையன் உள்ளிட்ட பலர் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. …

0 2
jaya

செப்டம்பர் 21-ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. பெரும்பாலான வீடுகளில் கொலு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கென விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான கொலு வைப்பதற்கென சில வரையறைகளை நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆயினும் இளம் தலைமுறை, தங்கள் கற்பனைக்கேற்ப விதவிதமான பொம்மைகளை வாங்கி வைத்து வித்தியாசமான கொலுக்களை அமைக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் சிலைகள் விற்பனைக்கு வந்தன. அவற்றை வைத்து சுதந்திரப் …

0 22
Sasi

புதுடெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகிவரும் பவானிசிங்கை நீக்கக் கோரிய அன்பழகன் மனு மீதான விசாரணை, அரசியல் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பும் மேலும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி …

0 8
bhavani

புதுடெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஆஜராகி வரும் அரசு வழ‌க்கறிஞர் பவானிசிங்கை நீக்க கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனுவை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. …

0 12
sasikala

சென்னை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. …

0 11
makkal

புதுடெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வஹேலா ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அறிவிப்பு வெளியான இரண்டு மாதத்திற்குள் டி.எச்.வஹேலா ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதே போல், ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக தலைமை நீதிபதி டி.எச்.வஹேலா பணி இடமாறுதல் குறித்து குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து ஆகியோர் கலந்தாலோசித்த பிறகே …

0 11