தமிழகத்தில் கோயில், கோயிலாக வழிபட்ட சுரேஷ் ரெய்னா!


raina

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சுரேஷ் ரெய்னாவிற்கு உலகக்கோப்பை முடிந்தவுடன்தான் திருமணம் நடைபெற்றது. போட்டிகளுக்காக சென்னை வரும் சுரேஷ் ரெய்னா, தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கும் விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம், நாகை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய கோயில்களில் சுரேஷ் ரெய்னா சுவாமி தரிசனம் செய்துள்ளார். திடீரென ஒரு சர்வதேச கிரிகெட் வீரரை கண்ட மக்கள், ஆர்வத்தில் பல செல்பிக்கள் எடுத்துள்ளனர்.

அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர். கும்பகோணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு உண்ட சுரேஷ் ரெய்னா, கோயில் சுற்றுப் பயணத்தை முடித்த பின்னர் ஊருக்கு திரும்பினார்.

Source: Vikatan

Previous பாட்டியை பலாத்காரம் செய்த காமகொடூரன்!
Next சென்னையில் வெளுத்து வாங்கும் கோடை மழை!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *