செம்மர கடத்தல் ஏரியாவில் ஷூட்டிங்: அலட்டிக்கொள்ளாத விஜய்! (ஸ்டில்ஸ்)


Shooting

சென்னை: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நடிகர் விஜய்யின் புலி திரைப்படக் குழு படப்பிடிப்பு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே தமிழகத்திலிருந்து செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி, 20 அப்பாவித் தமிழர்கள் ஆந்திர சிறப்பு வன அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டனர். இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவம் தமிழகத்தை இன்னும் பதற்றநிலையில் வைத்துள்ளது.

தமிழகத்தையே தலை சுற்றவைக்கும் செம்மர கடத்தல் ஏரியாவின் அருகில் இருக்கும் தலக்கோணம் ஏரியாவில் விஜய்யின் ‘புலி” படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பை கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு கண்காணித்து வருகிறது காக்கி வட்டாரம். இதனால் எழுந்த பரபரப்பினால் தேவையற்ற சர்ச்சை வேண்டாம் எனக் கருதி ‘ விவகாரம் வேண்டாம்…பேக்கப் சொல்லட்டுமா…?” என்று டைரக்டர் சிம்புதேவன் கேட்க, அதற்கு கறாராக ‘நோ” சொல்லி விட்டாராம் விஜய்.

பதற்றம் பற்றி எரியும் ஏரியாவுக்கு பக்கத்தில் கடந்த 25 நாட்களாக ஷூட்டிங் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

Source: Vikatan

Previous ரத்தக்களறியில் முடிந்த மாட்ரிட் டெர்பி!
Next 20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *