சானியா மிர்சாவால் பாகிஸ்தானுக்கும் பெருமை: சோயிப் மாலிக் சொல்கிறார்!


sania

டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, சர்வதேச அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு பெருமை சேர்த்து வருவதாக அவரது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தற்போது சுவிட்சர்லாந்து வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்துஇரட்டையர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த ஜோடி, அண்மையில் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஒருவர் முதலிடம் பெற்றது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில் சானியா மிர்சா, டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தது குறித்து அவரது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் கூறுகையில்,” எனது இந்திய மனைவியால் நான் மிக்க பெருமைக்குள்ளாகியிருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்குமே சானியா மிர்சாவால் சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்துள்ளார் சானியா மிர்சா. இரு நாடுகளிலும் உள்ள டென்னிஸ் இளம் வீரர்களுக்கு சானியா மிர்சா கடின உழைப்புக்கு உதாரணமாக விளங்குகிறார்”  என்றார்.

கடந்த 2010ஆம் ஆண்டு சானியா மிர்சா, சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Vikatan

Previous 126 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து?
Next 20 தமிழர்கள் படுகொலை: புதுச்சேரியில் முழு அடைப்பு!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *