ராஜபக்சேவை பிரதமராக்கி காட்டுவேன்: விமல் வீரவன்ச சவால்!


Rajapakse

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பொதுத்தேர்தலில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், போலியான வாக்குறுதிகளை வழங்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்களை தம்வசப்படுத்திக் கொள்ள அதிபர் மைத்திரிபால முனைகிறார் என்று குற்றம்சாட்டினார்.

ராஜபக்சே, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று அண்மையில் அதிபர் மைத்திரிபால தெரிவித்திருந்ததையும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் ராஜபக்சே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இல்லையேல், ராஜபக்சேவை ஒரு கட்சியில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.

Source: Vikatan

Previous உலகக் கோப்பை கால்பந்து: தகுதி சுற்றில் கடினமான பிரிவில் இந்தியா
Next இனி இணையதள சமத்துவம் இந்தியாவில் சாத்தியமா?

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *