பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்கும் போகோஹரம் தீவிரவாதிகள்!


Daily

ஆப்பிரிக்கா: போகோஹரம் தீவிரவாதிகள் பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்குகிறார்கள் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்து உள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், கடந்த சில ஆண்டுகளாக போகோஹரம் தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போனோவில் உள்ள சிபோக் நகரின் ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ந்தேதி தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

இந்த கடத்தல் சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் பல்வேறு நாடுகளின் படை வீரர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், மாணவிகள் கடத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், இதுவரை அவர்கள் யாரும் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 90 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் சில அதிர்ச்சி தரும் புகைபடங்கள், புதிய சாட்டிலைட் படங்கள், நைஜீரியா முழுவதும் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் இடம் பெற்று உள்ளது. புதிய தகவலாக சிபோக் பள்ளிக்கூடத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண்கள், போராளிகளை திருமணம் செய்து கொண்டதாக போகோஹரம் தலைவர் அபூபக்கர் ஷேகு கூறி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் அதில், கடத்தி செல்லபட்ட பெண்கள் பாலியல் அடிமைகளாகவும், தற்கொலை தீவிரவாதிகளாகவும் மாற்றப்படுகிறார்கள். மேலும், அவர்களுக்கு மூளை சலவை செய்து ஆயுதம் ஏந்துபவர்களாகவும் தீவிரவாதிகள் மாற்றி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்” என்று கூறப்பட்டு உள்ளது.

Source: Vikatan

Previous மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போகிறதா அஞ்சல்துறை?
Next உலகக் கோப்பை கால்பந்து: தகுதி சுற்றில் கடினமான பிரிவில் இந்தியா

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *