employee

ராமநாதபுரம்: அதிகாரியின் மிரட்டலுக்கு பயந்து சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளர் ஒருவர் அலுவலகத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவு அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் சண்முகவேலு (57). ராமநாதபுரம் அரசு ஊழியர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் நேற்று திடீரென அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சக ஊழியர்கள் இது குறித்து காவல்துறையினர் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு …

0 17
makkal

புதுடெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வஹேலா ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அறிவிப்பு வெளியான இரண்டு மாதத்திற்குள் டி.எச்.வஹேலா ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதே போல், ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக தலைமை நீதிபதி டி.எச்.வஹேலா பணி இடமாறுதல் குறித்து குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து ஆகியோர் கலந்தாலோசித்த பிறகே …

0 11
rameshwaram

ராமேஸ்வரம்: மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாள் மீன்பிடிப்பதற்கான தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இதனால் மீன்பிடி தொழிலை ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர். மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின் நீரோடி கிராமம் வரை உள்ள இந்த கடல்பகுதியில் ஆண்டு தோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடந்து வந்தது. இதனால் …

0 12
ramadoss

சென்னை: கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒதிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளுக்குரிய அதிகாரம் நீக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்பாக இந்த இடமாற்றம் …

0 7

சென்னை: கடும் எதிர்ப்பையும் மீறி திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழகம் சார்பில் நடக்கும் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கியதோடு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறும் திராவிட கழகத்தினரை நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உயர்நீ …

0 13
ANBUMANI

சென்னை:கருத்துரிமை பறிக்கப்படுவதைத் தடுக்க இணைய சமவாய்ப்பு சட்டம் தேவை என்று பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இணையத்தில் சமவாய்ப்பு என்கிற தற்போதைய நிலையை மாற்ற தனியார் செல்பேசி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்த சதித் திட்டத்திற்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒருபோதும் துணை போகக் கூடாது. இப்போது இணையத்தில் விரும்பும் தகவலைப் பெறுவதற்கும், விரும்பும் இணையப் பக்கத்தை பார்ப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு சமவாய்ப்பு …

0 7
twitter

பெர்லின்: சுபாஸ் சந்திர போஸ் உறவினர்கள் நேரு அரசால் நீண்ட ஆண்டுள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில் நேதாஜியின் உறவினர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு பின், நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968 …

0 15
modi

நியூயார்க்: சர்வதேச அளவிலான ‘செல்வாக்கு மிகுந்த’ 100 பேர் கொண்ட பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நியூயார்க்கிலிருந்து வெளியாகும் டைம் பத்திரிகை உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் இணையதளத்தின் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவில் இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு 0.6 சதவீத ஆதரவு வாக்குகளும், 34 சதவீத …

0 9
bus

சென்னை: தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு ஏற்கும்படியாக இல்லை என்று கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோட்பேட்டையில் நடைபெற்று வந்தது. நேற்று நடந்த போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் உடனான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் 5.5 சதவீத ஊதிய உயர்வினை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் ஏற்றுள்ள நிலையில், வேறு சில …

0 14
raja

சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சி திருட்டுத் தனமாக நடந்தது என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் இன்று காலை தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதை அறிந்ததும் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இந்து முன்னணியினர் 50 பேர் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்துவதற்காக …

0 6