raja

புதுடெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. கூறியுள்ள புதிய குற்றச் சாற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். 122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் …

0 14
Andhra

ஹைதராபாத்: சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றம், அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட சசிக்குமார் என்பவரது மனைவி முனியம்மாள் தொடர்ந்த வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக இன்று முனியம்மாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் விசாரணையின் போது, முனியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த என்கவுன்டர் குறித்து சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆந்திர …

0 5
Shooting

சென்னை: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நடிகர் விஜய்யின் புலி திரைப்படக் குழு படப்பிடிப்பு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே தமிழகத்திலிருந்து செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி, 20 அப்பாவித் தமிழர்கள் ஆந்திர சிறப்பு வன அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டனர். இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவம் தமிழகத்தை இன்னும் பதற்றநிலையில் வைத்துள்ளது. தமிழகத்தையே தலை சுற்றவைக்கும் செம்மர கடத்தல் ஏரியாவின் அருகில் இருக்கும் தலக்கோணம் ஏரியாவில் விஜய்யின் ‘புலி” படப்பிடிப்பு நடந்து …

0 21
football

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ரியல்மாட்ரிட்- அத்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ரத்தக்களறியில் முடிந்தது. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதி முதல் லெக் ஆட்டத்தில்,நேற்று மாட்ரிட் நகரை சேர்ந்த ரியல்மாட்ரிட்- அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. மாட்ரிட் நகரில் உள்ள கால்ட்ரைன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே முரட்டு ஆட்டம் தலை தூக்கியது. வீரர்கள் எதிர் அணி வீரர்களை பதம் பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர். இதில் அத்லெடிகோ மாட்ரிட் அணி …

0 9
bandh

புதுச்சேரி: ஆந்திராவில் 20 தமிழர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களைக் கடத்த முயன்றதாக கூறி, 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இது தமிழகம் மற்றும் புதுவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர அரசின் இந்த கொடூர செயலை கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர அரசை …

0 6
sania

டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, சர்வதேச அரங்கில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு பெருமை சேர்த்து வருவதாக அவரது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார். பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தற்போது சுவிட்சர்லாந்து வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்துஇரட்டையர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த ஜோடி, அண்மையில் டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஒருவர் முதலிடம் பெற்றது இதுவே முதல் முறை ஆகும். இந்நிலையில் சானியா மிர்சா, டென்னிஸ் …

0 7
aircraft

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் ரபெல் போர் விமானங்கள் வாங்க அந்நாட்டுடன் இந்தியா செய்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3 ஆண்டுகள் பேரம் பேசியும், விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இதில் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 4 …

0 37
mavo

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா பகுதியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். மாவோயிஸ்ட்டுகளின் தொடர் தாக்குதல்களால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது. கடந்த 11 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் போலம்பள்ளி பிட்மெல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிரடி படை வீரர்களை குறிவைத்து மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீஸார் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்றுமுன்தினம் …

0 8
police

சென்னை: பால்காரர், பேப்பர்காரர், பழைய பொருள் விற்பவர், வேலைக்காரர்கள் என்று நிறைய பேரை நாம் சந்திக்கிறோம். எல்லோரிடமும் கவனமாக இருந்து கொள்ளவேண்டும் என்று சென்னை நீலாங்கரையில் நடந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சங்கர் பேசினார். நீலாங்கரையில் உள்ள பாரதியார் நகர் பொதுமக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் பாரதியார் நகர் மக்களுக்கு குற்றங்களைத் தடுப்பது, விழிப்போடு இருப்பது குறித்து காவல்துறையினர் தகவல்களை வழங்கும் வகையில் காவல்துறை- பொதுமக்கள் சந்திப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உதவி ஆணையர் சங்கர் பேசுகையில், …

0 16
modi

புதுடெல்லி: தமிழ் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டை இன்று உலக முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் நண்பர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தமிழ் நண்பர்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகள் அவர்களுக்கு சிறப்பாக அமையவும், மகிழ்ச்சியாக இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். Source: Vikatan

0 14