Untitled

புதுடெல்லி: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றி மத்திய அரசிடம் ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் நேரில் விளக்கம் அளித்து உள்ளார். திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி, 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட படுகொலை என்று கூறப்படுவதால், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு …

0 8
festival

மேலுார்: வெற்றிலை பிரி திருவிழா “வெகுவிமரிசையாக ,வெள்ளளூரில் நேற்று கொண்டாடப்பட்டது. சித்திரை முதல்நாளில், 58 கிராமங்களுக்கு 44 பேர் பிரித்து கொடுத்த வெற்றிலையை மட்டுமே பயன்படுத்தும் விநோத விழா இது. மேலூர் அருகேயுள்ள வெள்ளளூர் கிராமத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படக்கூடிய சுற்றியுள்ள 58 கிராமங்கள் ஒன்றிணைந்து, “வெள்ளளூர் நாடு”என்றழைக்கப்படுகிறது. 58 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மூண்டவாசி ,வேங்கைப்புலி, சமட்டி, சாவடை தாங்கி, சலிப்புளி, செம்புலி, நண்டன் கோபாலன், பூலமறவராயன், நைக்கான், வெக்காளி, திருமான் என 11 பிரிவுகளாக உள்ளனர். …

0 17
women

தர்மபுரி: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய 5 பேரை பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள மகளிர் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி மாலை, பள்ளி முடிந்து மாணவி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே மாணவி சென்ற போது, அதே …

0 10
letter

சென்னை: ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை கொல்வோம் என்று கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை டி.ஜி.பி. அலுவலகம் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றுக்கு இன்று காலை தனித்தனியாக அஞ்சலில் 2 கடிதங்கள் வந்தன. அதை பிரித்து பார்த்தபோது, அதிர்ச்சி அளிக்கும் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. சிவப்பு மையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், “சென்னையில் 50 ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை அடையாளம் கண்டு வைத்துள்ளோம். அவர்களில் 10 பேரையாவது விரைவில் சுட்டுக்கொல்வோம். கோவையில் நடைபெற்ற …

0 7
Anna

2013-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் மிச்சமில்லாமல் வேட்டையாடப்போகும் கோர வடிவிலான நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இதை கண்டித்து கடந்த மார்ச் 18-ம் தேதி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வந்து குவிந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி வீதிகளை போராட்டக் களங்களாக மாற்றினர். போராட்டத்தின் ஐந்தாம் நாளில், போராட்டக்குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து விவசாயிகளுக்கு எதிரான …

0 8
Sirisena

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் மகனான கால்நடை மருத்துவர் விமுக்தி குமாரதுங்க மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா சிறிசேன ஆகியோர் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழைவதற்கு தாயார் சந்திரிகாவின் முழுமையான ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. ஒரு போதும் அரசியலில் நுழையமாட்டேன் என கூறிக்கொண்டிருந்த விமுக்தி குமாரதுங்க, தந்தை பண்டாரநாயக்கவின் ஆதரவாளர்கள் வழங்கிய யோசனையையடுத்து தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என சிந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …

0 7
malli

ஆண்டிஸ் மலைத் தொடரில் மலையேற்றத்தின்போது உயிரிழந்த இந்திய மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல், அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை 172 நாட்களில் ஏறியவர் என்ற சாதனையைப் படைத்த, இந்தியாவின் மிகச்சிறந்த மலையேறும் வீரர்களில் ஒருவரான மல்லி மஸ்தான் பாபு, கடந்த டிசம்பர் மாதம் 16-ம்தேதி அர்ஜென்டினா மற்றும் சிலி எல்லையில் அமைந்துள்ள ஆண்டஸ் மலைத்தொடரில் மலையேற்றம் செய்வதற்கு சென்றார்.மோசமான வானிலை காரணமாக மார்ச் மாதம் 24-ம்தேதி முதல் …

0 9
sena

மும்பை: இந்தியாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தினரின், மக்கள் தொகை உயர்வு இந்து மக்களுக்கு பெரிதும் ஆபத்தானது என்று சிவசேனா, தனது கட்சி நாளிதழான ‘;சாம்னா’வில் தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சாத்வி தேவா தாகூர் கூறியதற்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவசேனா, அவர் குடும்பக் கட்டுப்பாடு வேண்டும் என்பதை குறிப்பிட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. “மிக விரைவில், இந்தியாவின் இஸ்லாமிய …

0 5

இந்திய அரசாங்கம் புற்றுநோய் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் மாதம் முதல் 3.84 சதவிகிதத்திற்கு அதிகரித்து கொள்ளலாம் என்று மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் 348 அத்தியாவசிய மருந்துகளை தவிர, மற்ற மற்ற மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மருந்து நிறுவனங்கள், தனது அபரிதமான லாபங்களுக்காக இந்திய காப்புரிமை சட்டத்தை …

0 10
raza

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராசா ஹசன் கோகையின் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கராச்சியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது ராசா ஹசனிடம் ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் (World Anti-Doping Agency- WADA )சிறுநீர் மாதிரியை ஆய்வுக்காக எடுத்தனர். இந்தியாவில் உள்ள பரிசோதனை மையத்தில் அவரது சிறுநீர் மாதிரியை ஆய்வுக்குட்படுத்திய போது, அவர் கோகையின் என்னும் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து …

0 6