modi

பெர்லின்: இந்தியாவின் மதச் சார்பின்மை வலுவாக உள்ளதாகவும் அதை மொழிப் பிரச்சினைகளால் அசைக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, “இந்தியாவின் மதச் சார்பின்மை வலுவாக உள்ளது. அதை மொழி பிரச்சினைகள் போன்ற சிறு விவகாரங்களால் அசைத்துவிட முடியாது. ஜெர்மனி நாட்டு வானொலியில் ஒரு காலத்தில் சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பப்படும். ஆனால், அப்போது இந்திய வானொலிகளில்கூட சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பாகவில்லை. சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பினால் இந்தியாவின் …

0 9
Ambedkar

புதுடெல்லி/சென்னை: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்ட மேதை அம்பேத்கரின் 125வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மத்திய அமைச்சர்கள் …

0 16
ISIS

வாஷிங்டன்: கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த தாக்குதல் போன்று மீண்டும் அமெரிக்கா பற்றி எரியும் அளவுக்கு தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டு உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நாசவேலைகளிலும் …

0 7
Cricket

பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 8வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஹைதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஹைதராபாத் அணியில் ஸ்டெயினுக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு …

0 13
singh

புதுடெல்லி: சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்ககோரும் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான மேல் முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதற்கு எதிராக அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்துள்ளது. இந்த வழக்கில் நாளை பிற்பகல் 1.05 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source: Vikatan

0 9
internet

ஏர்டெல், ரிலையன்ஸ்… என்று யாருடைய சர்வீஸை பயன்படுத்துகிறோமோ அந்த சர்வீஸ் புரொவைடர்கள் சொல்லும் ஆப்ஸை மட்டுமே டவுன் லோடு செய்து… அவர்கள் காட்டும் மெசெஞ்சரில் மட்டுமே செய்திகளை பரிமாறிக் கொண்டு அவர்கள் சொல்லும் வலைத்தளத்தில் மட்டுமே வீடியோக்களைப் பார்க்கும் அடிமைகளாக வெகு சீக்கிரமே ஆகப்போகிறோம். இது சாபம் அல்ல. அத்தனை பேரும் ஒன்று திரண்டு இப்போது குரல் கொடுக்காவிட்டால் நிச்சயம் நம் நிலைமை இதைவிட கேவலமாகிப் போய்விடும் என்பதுதான் அப்பட்டமான உண்மை! ஆம், இணையத்தில் நாம் இப்போது …

0 15
jjj

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. சாட்சியங்கள் கொடுத்த வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்னிலையில் வாசித்து வாதிடுகிறார் பவானிசிங். சிவாவின் வாக்குமூலம்! பெயர்: சிவா தந்தை பெயர்: சொக்கலிங்கம் கிராமம்: 18/13ஆ, திருநகர், வில்லிவாக்கம் தாலுக்கா: சென்னை – 40 வயது: 53 நான் 1994 ஆம் ஆண்டு அண்ணாநகர் பிளாட் நம்பர் 1078, 19 வது மெயின் ரோட்டில் வசித்தேன். நான் ரியல் எஸ்டேட் தொழில் …

0 15
rain

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கி மாணவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆரணியில் 100 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. வேலூர் மாவட்டத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பாக 106.5 டிகிரி அளவிற்கு வெயில் கொளுத்தியது. நேற்று பிற்பகலில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்குக்கெடுத்து ஓடியது. பலத்த மழையின் காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் மாணவன் உட்பட 5 பேர் …

0 20
Madras

சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, கிருஷ்ணவேணி, சித்ரா, கெயிட்டி, காசினோ, பிளாசா, பைலட், அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிகண்ட், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி, மேகலா, உமா ராக்ஸி, சரவணா, பாலாஜி, சரஸ்வதி, லட்சுமி, அலங்கார், சபையர், ஆனந்த் போன்றவை. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயசங்கர், ரவிசந்திரன், கமல், ரஜினியின் ஆரம்ப காலங்கள் வரை இந்தத் திரையரங்குகள் படு …

0 38
Sena2

ஹைதராபாத்: முஸ்லிம்களின் வாக்கு உரிமையை பறிக்க வேண்டும் என்ற கட்டுரையை வெளியிட்ட சிவசேனா கட்சி இதழின் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒவைசி தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் என சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிட்டு இருந்தது. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள அந்த கட்டுரையில், இஸ்லாமிய சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக மதச்சார்பற்ற மற்றும் இந்துத்துவா இயக்கங்கள் நாடகமாடி வருவதால், …

0 14