மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியைக்கு கத்திக்குத்து


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், இதழியில் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார் ஜெனிபா. அதே பல்கலைக்கழகத்தில், கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றிய வந்தவர், ஜோதிமுருகன். இதனிடையே, ஜோதிமுருகனை ஜெனிபா, சஸ்பெண்ட் செய்துள்ளார். இதையடுத்து, அவர் பல்வேறு முறை ஜெனிபாவைச் சந்தித்து, மீண்டும் பணியில் சேர்க்குமாறு முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் ஜெனிபாவைச் சந்திப்பதற்காக, ஜோதிமுருகன் அவரது துறைக்குச் சென்றுள்ளார். அப்போது, சஸ்பெண்ட் செய்ததால், தனது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது என்று கூறி, அவர் ஜெனிபாவைக் கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவத்தால், ஜெனிபா கூச்சலிட்டு கத்தியுள்ளார். பின்னர் மாணவர்களும், ஆசிரியர்களும் ஜோதிமுருகனை கையும் களவுமாகப் பிடித்து, தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோதி முருகன்

கத்திக்குத்தில், பலத்த காயமடைந்த ஜெனிபா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Source: Vikatan

Previous 'பி.ஜே.பி-யின் எடுபிடி இந்த அ.தி.மு.க. அரசு!’’ - கொதிக்கிறார் சுப.வீரபாண்டியன்
Next அப்போலோவில் ஜெயலலிதாவைப் பார்த்தீர்களா? அமைச்சர் செல்லூர் ராஜு தடாலடி பதில்

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *