ரத்தக்களறியில் முடிந்த மாட்ரிட் டெர்பி!


football

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ரியல்மாட்ரிட்- அத்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ரத்தக்களறியில் முடிந்தது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதி முதல் லெக் ஆட்டத்தில்,நேற்று மாட்ரிட் நகரை சேர்ந்த ரியல்மாட்ரிட்- அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. மாட்ரிட் நகரில் உள்ள கால்ட்ரைன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே முரட்டு ஆட்டம் தலை தூக்கியது. வீரர்கள் எதிர் அணி வீரர்களை பதம் பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர். இதில் அத்லெடிகோ மாட்ரிட் அணி வீரர் மான்ட்சூகிச்சின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இந்த ஆட்டத்தில் ஒரு முறை மரியோ மான்ட்சூகிச்சை, ரியல்மாட்ரிட் அணி வீரர் கர்வாஜல் கையை பிடித்து கடித்து வைத்தார். இதனை நடுவர் கண்டு கொள்ளவில்லை. மற்றொரு முறை ரியல்மாட்ரிட் அணியின் தடுப்பாட்ட வீரர் செர்ஜியோ ரமோஸ் பந்தை முட்டும் சாக்கில் முழங்கையால் மான்ட்சூகிச்சின் முகத்தை தாக்கினார். இதில் மான்ட்சூகிச்சின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.

களத்தில் எதிரணி வீரர்களை தாக்க காட்டிய ஆர்வத்தை கோல் அடிப்பதில் காட்டாததால் இந்த ஆட்டம் கோல் எதுவும் விழாமல் சமனில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி மொனாக்கோ அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

Source: Vikatan

Previous 20 தமிழர்கள் படுகொலை: புதுச்சேரியில் முழு அடைப்பு!
Next செம்மர கடத்தல் ஏரியாவில் ஷூட்டிங்: அலட்டிக்கொள்ளாத விஜய்! (ஸ்டில்ஸ்)

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *