உளவு விவகாரம்: மோடியைச் சந்தித்த நேதாஜியின் உறவினர்!


twitter

பெர்லின்: சுபாஸ் சந்திர போஸ் உறவினர்கள் நேரு அரசால் நீண்ட ஆண்டுள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில் நேதாஜியின் உறவினர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு பின், நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968 ஆம் ஆண்டு வரை நேதாஜியின் குடும்பத்தினரை உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடியை நேதாஜியின் உறவினரான சூர்யகுமார் போஸ் நேரில் சந்தித்து பேசினார்.

சந்திப்பின் போது சூர்யகுமார் போஸ், பிரதமர் மோடியிடம் நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடும்படி வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடியும், இவ் விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டு பரிசீலனைக்கு பின்னர் முடிவு எடுப்பதாக தெரிவித்து உள்ளார். சூர்ய குமார் போஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ஆவணங்களைப் பார்க்காத நிலையில், வெளிப்படுத்துவது தொடர்பாக தன்னால் முடிந்தவரையில் முயற்சி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார், ஆவணம் தொடர்பாக தீர்ப்பு அளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்” இது மிகவும் நேர்மையான பதில் ஆகும், இவ்விவகாரத்தை கருத்தில் கொள்வதாகவும், எதாவது செய்வதாகவும் வாக்குறுதியாவது அளித்து உள்ளார். நானும் நம்பிக்கையாக உள்ளேன். என்று கூறினார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை நேதாஜியை பற்றிய 100 க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேதாஜியின் நெருங்கிய உறவினர்களான சிசிர்குமார் போஸ் , அமியாநாத் போஸ், அவருடைய ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் 1948 ஆம் ஆண்டு தொடங்கி, நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968 ஆம் ஆண்டு வரையிலும் உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் உளவுத்துறையின் வளையத்துக்குள் இருந்தும் உள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தாகக் கூறப்படுகிறது.

அண்மையில் அனுஜ் தர் என்னும் எழுத்தாளர் எழுதிய ‘இண்டியாஸ் பிக்கஸ்ட் கவர்–அவ்’ என்ற புத்தகத்தில் நேதாஜியின் மர்ம மரணம் தொடர்பான இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Source: Vikatan

Previous உலகில் செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில் கெஜ்ரிவால்!
Next கருத்துரிமை பறிக்கப்படுவதை தடுக்க இணைய சமவாய்ப்பு சட்டம் தேவை: அன்புமணி!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *