நிதியில்லாமல் தவித்த இந்திய ஐஸ் ஹாக்கி அணிக்கு கவுதம் கம்பீர் நிதியுதவி!


gou

நிதியில்லாமல் குவைத் செல்ல முடியாமல் தவித்து வந்த இந்திய ஐஸ்ஹாக்கி அணிக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ரூ. 4 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்திய ஐஸ் ஹாக்கி அணி குவைத்தில் நடக்கும் ஆசிய சேலஞ் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. ஆனால் அதற்கு தேவையான நிதி இல்லாமல் அல்லாடி வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய ஐஸ்ஹாக்கி அணிக்கு நிதியுதவி செய்யும்படி, ஐஸ்ஹாக்கி சங்க அமைப்பே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர், தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் அந்த அணிக்கு ரூ. 4 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

இது பற்றி கம்பீர் கூறுகையில், ”இந்திய ஐஸ் ஹாக்கி அணியின் நிலை பற்றி ரேடியோ நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன். ஐஸ் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிப்பது நம் கடமை. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியாவில் ஐஸ் ஹாக்கி கண்டுகொள்ளப்படால் இருப்பது நல்லது அல்ல. சிறிய விளையாட்டுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

இந்திய ஐஸ் ஹாக்கி அணியின் கேப்டனான லடாக்கைச் சேர்ந்த சேவாங் கியால்ட்சன் கூறுகையில், குவைத்தில் நடக்கும் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

குவைத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க ரு. 12 லட்சம் மொத்தம் தேவைப்படுவதாக இந்திய ஐஸ் ஹாக்கி அணி ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

Source: Vikatan

Previous சென்னையில் தள்ளுவண்டி கடையில் பழங்கள் வாங்கிய பிராவோ!
Next பவானிசிங்கை நீக்க கோரிய திமுக மனு அரசியல் அமர்வுக்கு மாற்றம்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *