ஊர் ஒற்றுமைக்கு வெற்றிலை பிரி திருவிழா!


festival

மேலுார்: வெற்றிலை பிரி திருவிழா “வெகுவிமரிசையாக ,வெள்ளளூரில் நேற்று கொண்டாடப்பட்டது. சித்திரை முதல்நாளில், 58 கிராமங்களுக்கு 44 பேர் பிரித்து கொடுத்த வெற்றிலையை மட்டுமே பயன்படுத்தும் விநோத விழா இது.

மேலூர் அருகேயுள்ள வெள்ளளூர் கிராமத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படக்கூடிய சுற்றியுள்ள 58 கிராமங்கள் ஒன்றிணைந்து, “வெள்ளளூர் நாடு”என்றழைக்கப்படுகிறது. 58 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மூண்டவாசி ,வேங்கைப்புலி, சமட்டி, சாவடை தாங்கி, சலிப்புளி, செம்புலி, நண்டன் கோபாலன், பூலமறவராயன், நைக்கான், வெக்காளி, திருமான் என 11 பிரிவுகளாக உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவையும் நிர்வகிக்க இரு அம்பலகாரர், இரு இளங்கச்சி என மொத்தம் நால்வர் வீதம், 11 பிரிவுகளுக்கு 22 அம்பலகாரர்களும், 22 இளங்கச்சிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படி மொத்தம் உள்ள 44 நபர்களும்தான், 58 கிராமங்களுக்கும் நிர்வாகிகளாகச் செயல்படுகின்றனர்.

இந்த 44 நபர்களும், சித்திரை முதல் நாள் ஒன்றிணைந்து, வெள்ளளூர் கருங்கல் மந்தையில் ஒன்று கூடினர். பின்னர் தமிழ் எழுத்து “ப” வடிவில் அமர்ந்தனர். பின் 44 பேருக்கும் மத்தியிலும் வெற்றிலைகள் கொண்டுவரப்பட்டது. பின் பாரம்பரிய முறைப்படி,அந்த 44 நபர்களின் உதவியால், 58 கிராமத்திற்குத் தேவையான “வெற்றிலைகளை பிரிக்கும் விநோத திருவிழா “படுவிமரிசையாக நடந்தது.

இப்படி பிரித்து வழங்கப்படும் வெற்றிலைகள், 58 கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டு, பூஜைக்கு பயன்படுத்தப்பட்டு, பின் வயல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறதாம். பின் நிலத்திலேயே வெற்றிலைகள் வைத்திருக்கப்படுகிறதாம். இதன்மூலம் விவசாயம் செழித்து தங்கள் வாழ்க்கை வளம்பெறும் என்பது அவர்களின் நம்பிக்கை.

இவ்விழாவில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கு கொண்டனர். இதன் மூலம் விவசாயம் செழிக்கும், மழை நன்கு பெய்யும், ஊர் செழிக்கும் என்பது ஊர் மக்களின் ஐதீகம்.

மதம், இனம், பொருளாதார பாகுபாடு என்ற பல வேற்றுமைகளுக்கு மத்தியில் ஊர் ஒன்று கூட ஒரு விழா உதவுகிறதென்றால், வெற்றிலை பிரி திருவிழாவும் நல்லதென வரவேற்கலாம்.

Source: Vikatan

Previous வீடியோவை வைத்து மிரட்டி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!
Next துப்பாக்கிச் சூடு சம்பவம்: மத்திய அரசிடம் ஆந்திர தலைமை செயலாளர் விளக்கம்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *