தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வுக்கு கொலை மிரட்டல்!


Mariyappan

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி அலுவலகத்துக்கு மொட்டைக் கடிதம் மூலாகக் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்தக் கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இவரின் நேர்முக உதவியாளர் விஜயக்குமார் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ttv1

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே அ.தி.மு.க முன்னாள் இன்னாள் நிர்வாகிகள் அனைவருமே சசிகலா ஆதரவாளர்கள்தான். ஓ.பி.எஸ் அதிமுக-வைவிட்டு வெளியேறி தர்மயுத்தம் நடத்துகிறேன் என்று சொன்னபோதுகூட கட்சி நிர்வாகிகள் ஒருசிலரைத் தவிர வேறு யாரும் செல்லவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதிக்கு கற்பகம் இளங்கோ, திருப்பத்தூர் தொகுதிக்கு அசோகன், சிவகங்கை தொகுதிக்கு தற்போதைய அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை தொகுதிக்கு மாரியப்பன் கென்னடி ஆகியோரெல்லாம் சசிகலாவின் தயவால் வேட்பாளர்களாகக் களமிறங்கினார்கள். ஆனால், மக்கள் அளித்த தீர்ப்பில் மாரியப்பன் கென்னடி, பாஸ்கரன் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். இன்றைக்கு அ.தி.மு.க-வில் அதிகாரப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சசிகலா ஆதரவாக இருந்தவர்கள் எல்லாம் எடப்பாடி அணிக்கு தாவியிருக்கிறார்கள். மாரியப்பன் கென்னடி மட்டும் சசிகலா அணியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். அமைச்சர் பாஸ்கரன் பதவிக்காக எடப்பாடி அணியில் இருக்கிறார்.

ttv2

தற்போது மாரியப்பன் கென்னடி, தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் ரிசார்ட்களில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவரையும் இவரது குடும்பத்தாரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் கடிதம் வந்திருப்பது மானாமதுரை தொகுதிக்குள் மட்டுமல்லாது, சிவகங்கை மாவட்டத்தில் பலரையும் சந்தேகப்பட வைத்திருக்கிறது இந்தக் கடிதம். சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், சசிகலா ஆதரவாளர் என்பது அனைவருக்குமே தெரியும். இவரும் எடப்பாடி பக்கம் இருக்கிறார். இந்தக் கடிதம்  தற்போது பலரையும் சந்தேகப்பட வைத்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.

 

Previous 'Baywatch' bombs at box office, 'Pirates of the Caribbean' wins Memorial Day weekend
Next முன்னோரின் ஆன்மாவைக் குளிரச் செய்யும் மகாளய பட்ச வழிபாடும், பலன்களும்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *