கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திடீர் இடமாற்றம்!


makkal

புதுடெல்லி: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வஹேலா ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

அறிவிப்பு வெளியான இரண்டு மாதத்திற்குள் டி.எச்.வஹேலா ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அதே போல், ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பதவியேற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக தலைமை நீதிபதி டி.எச்.வஹேலா பணி இடமாறுதல் குறித்து குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து ஆகியோர் கலந்தாலோசித்த பிறகே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த இடமாறுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Source: Vikatan

Previous 45 நாள் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது!
Next தமிழகத்தில் தொடரும் அரசு ஊழியர்கள் தற்கொலை: அதிகாரி மிரட்டலால் நடந்த விபரீதம்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *