Posts in category

செய்திகள்


khush

சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்களின் கருத்தை பதிவு செய்ய நடத்தப்பட்டது என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார். திராவிடர் கழகம் நேற்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது. இந்து முன்னணி, இந்து மகாசபை உள்பட 10 அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா …

0 11
nutrality

சென்னை: இந்தியாவில் இணையதள சமத்துவப் பயன்பாடு வரும் நாட்களில் இருக்குமா என்ற கேள்வி இணையதள உலகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இணைய வழி தொடர்பில் இணைய தளங்கள் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி இதுவரை அறிவுசார் விஷயங்களையும், ஆன்லைன் வர்த்தகங்களையும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் நடுநிலைமையோடு நாம் அணுகி வருகிறோம். நமக்கு என்ன தேவையோ அதை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து பயன்படுத்திவருகிறார்கள். அதாவது அனைத்து இணையதளங்களும், சரிசமமாக அணுகுவதாக இருக்கவேண்டும், சமச்சீரான வேகத்தை கொண்டதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு இணையதள …

0 9
Rajapakse

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பொதுத்தேர்தலில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், போலியான வாக்குறுதிகளை வழங்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்களை தம்வசப்படுத்திக் கொள்ள அதிபர் மைத்திரிபால முனைகிறார் என்று குற்றம்சாட்டினார். ராஜபக்சே, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று அண்மையில் அதிபர் மைத்திரிபால தெரிவித்திருந்ததையும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் ராஜபக்சே, ஐக்கிய …

0 9
ind

வரும் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில், கடினமான டி பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணி இடம் பெற்றுள்ள பிரிவில் ஈரான்,ஓமன், துர்க்மெனிஸ்தான் மற்றும் குவாம் அணிகள் இடம் பெற்றுள்ளது. நேபாள அணியை வீழ்த்தியதையடுத்து இந்திய அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பிரதான தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று பிரதான சுற்றின் அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் …

0 10
Daily

ஆப்பிரிக்கா: போகோஹரம் தீவிரவாதிகள் பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்குகிறார்கள் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், கடந்த சில ஆண்டுகளாக போகோஹரம் தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போனோவில் உள்ள சிபோக் நகரின் ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ந்தேதி தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த கடத்தல் சம்பவம் உலக நாடுகளை பெரும் …

0 13
postel

மக்களோடு பின்னிப் பிணைந்த அரசுத்துறை ஒன்று உண்டென்றால், அது அஞ்சல் துறைதான். முன்பெல்லாம் கிராமங்களில் அஞ்சல்காரர்கள்தான் மக்களின் கூகுள் போல காட்சி தந்தார். ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவராக அஞ்சல்காரர் இருப்பார். காரணம் விவரம் தெரிந்தவராக மக்கள் அவரை மதித்ததால். ரயில்வேக்கு அடுத்த பெரிய அரசு நிறுவனமாக அஞ்சல் துறை திகழ்ந்தது. மக்கள் சேவை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு லாபத்தை இரண்டாம் பட்சமாக்கி செயல்பட்டு வந்த அஞ்சல் துறை தற்போது பேங்கிங், ஏடிஎம், ஆர்.டி, டெபாசிட் வசூலித்தல், ஃபாரின் …

0 10
sasikala

சென்னை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. …

0 9
Ramadoss

சென்னை: அரசு கேபிள் தொலைக்காட்சி ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பொழுதுபோக்கு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பும் இந்த நிறுவனத்தில், பொழுதுபோக்காக செய்தியே வெளியில் கசியாமல் நடக்கும் ஊழல்களால் அரசுக்கு …

0 5
rain

சென்னை: சென்னையில் கோடை வெயில் மக்களை வாட்டி எடுத்த நிலையில், திடீரென பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில வாரங்களாவே கோடை வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் தவித்து வந்தனர். வீடுகளின் மொட்டை மாடிகளிலும், வீட்டின் வராண்டாவிலும் படுத்து உறங்கினர் மக்கள். தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே கோடை மழை தொடங்கிவிட்டது. இதனால், அந்த மாவட்டங்களில் வெயிலின் …

0 11
raina

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். சுரேஷ் ரெய்னா, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுரேஷ் ரெய்னாவிற்கு உலகக்கோப்பை முடிந்தவுடன்தான் திருமணம் நடைபெற்றது. போட்டிகளுக்காக சென்னை வரும் சுரேஷ் ரெய்னா, தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கும் விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம், நாகை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய …

0 6