Posts in category

செய்திகள்


tamilisai

Chennai: சென்னையில் உள்ள ஹோட்டலில் இரண்டு இட்லி, ஒரு வடை சாப்பிட்டு பில் செலுத்திய பின்னர் ஜி.எஸ்.டி வரியை ஆய்வுசெய்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நடிகர் கமல்ஹாசனைக் கிண்டலடித்தார். அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில் அண்மையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி தொடர்பான ஆய்வு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 177 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு கடந்த 15-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஆனால், வணிக நிறுவனங்கள், …

0 17

” பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது” என ஐ.நா சபை சாடியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், ‘தூய்மை இந்தியா’. இத்திட்டம் அறிமுகமாகி சுமார் மூன்றாண்டுகள் நிறைவடைந்தபோதும் இந்தியாவின் தூய்மை மேம்படவே இல்லை என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இத்திட்டம்குறித்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நிலைதான் உருவாகியுள்ளது. பிரதமர் …

0 15

Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே, சம்பாதித்துக்கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டு, திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்துவட்டிக் கொடுமையால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழகத்தில் கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில், தாங்கள் சம்பாதித்துக் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று திருநங்கைகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து, மாயா என்ற திருநங்கை, “ராஜம்மாள் மற்றும் அவர் …

0 23

Chennai: விசைப் படகுகளில் சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் இன்று காலை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, சீன இன்ஜின் அகற்றம் காரணமாக இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது தடியடி நடத்திவருகிறார்கள்! இதனால் ஆவேசமடைந்த மீனவர்கள், அரசுப் பேருந்துகளின்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால், இரண்டு மாநகரப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. போலீஸ் தடியடியால் அங்கு …

0 15

வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட்டில் குழுவின் அட்மின், படங்கள், பெயர்கள் மற்றும் ஐகான்களைக் குறிப்பிட்ட நபர் மட்டுமே மாற்றும் வகையில் வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். புதிய வாட்ஸ்அப் அப்டேட், வாட்ஸ்அப் ரசிகரின் கருத்துகளைக் கேட்டுத் தரப்படுகிறது. இந்த அப்டேட்களை …

0 20

ஐந்து நாள் அவசரப் பரோலில், சிறைவாசத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளார் சசிகலா. இது தற்காலிக விடுபடுதல் என்றாலும் ‘இச்சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடே அனுபவிக்கிறார் சசிகலா’ என்கின்றனர் அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள். “பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட அந்தக் கணத்திலேயே அவர் முகத்தில் ஏகப்பட்ட உற்சாகம். நடு சீட்டில் அமர்ந்திருந்தவர் ஜன்னலோர கண்ணாடியில் முகம் புதைத்து இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வந்துள்ளார். வழியெங்கும் ஆதரவாளர்கள் தேங்காய், பூசணி உடைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்பு கொடுத்தனர். வழியில் டீ கடையில் …

0 15

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, ஐந்து நாள் பரோலில் சென்னை வருகிறார். தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் அவர் தங்க உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, …

0 14

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று மாலைக்குள் சென்னை வர இருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ‘ டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா. பரோல் காலம் முடிவதற்குள் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என அவர் நம்புகிறார்’ என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இன்று அவர் பரோலில் வர இருக்கிறார். கணவர் …

0 22

இன்றைக்குத் தினசரி செய்திகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது `டெங்குக் காய்ச்சல்.’ தமிழக அரசு, `ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு கொசு ஒழிப்பு தினமா’க அனுசரிக்கும் அளவுக்கு இதற்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது. சென்னை எழும்பூர் அரசுக் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர், பேராசிரியர் இரா.சோமசேகர் “டெங்குக் காய்ச்சல் தடுப்பு… நம் அனைவருக்குமான பொறுப்பு (Dengue fever Control – Every one’s Responsibility)’’ என்கிறார். மேலும் டெங்குக் காய்ச்சல், எப்படிப் பரவுகிறது, அதற்கான சிகிச்சைகள், அதைத் …

0 6

“அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். அந்த எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. போர் வரட்டும்” அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்கள் மத்தியில் பேசினார். இதன்மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்பது தெரியவந்தது. ஆனால், நடிகர் கமல் களத்தில் இறங்கி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசியும், டுவிட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டும் வருகிறார். கமலின் கருத்துகளை எதிர்க்கும்விதமாக தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார், “அரசியலுக்கு வந்துவிட்டு கமல் கருத்துகளைத் தெரிவிக்கட்டும்” என்றார். …

0 6