இந்தியாவின் மதச் சார்பின்மையை அசைக்க முடியாது: பிரதமர் மோடி!


modi

பெர்லின்: இந்தியாவின் மதச் சார்பின்மை வலுவாக உள்ளதாகவும் அதை மொழிப் பிரச்சினைகளால் அசைக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, “இந்தியாவின் மதச் சார்பின்மை வலுவாக உள்ளது. அதை மொழி பிரச்சினைகள் போன்ற சிறு விவகாரங்களால் அசைத்துவிட முடியாது. ஜெர்மனி நாட்டு வானொலியில் ஒரு காலத்தில் சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பப்படும். ஆனால், அப்போது இந்திய வானொலிகளில்கூட சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பாகவில்லை. சமஸ்கிருதத்தில் செய்தி ஒலிபரப்பினால் இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயத்தில் அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். முதலில் நமக்கு தன்னம்பிக்கை வேண்டும். இந்தியாவின் மதச் சர்பின்மையின் வலிமை மீது நம்பிக்கை வேண்டும். மொழிப் பிரச்சினைகளால் இந்திய மதச் சார்பின்மையை அசைக்கக் கூட முடியாது என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும்” என்றார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடத்தை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மொழிகளால் மதச் சார்பின்மைக்கு பாதிப்பு இல்லை என கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

Source: Vikatan

Previous அம்பேத்கர் பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!
Next திருட்டுத்தனமாக தாலி அகற்றும் நிகழ்ச்சி: ஹெச்.ராஜா கண்டனம்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *