சென்னையில் தள்ளுவண்டி கடையில் பழங்கள் வாங்கிய பிராவோ!


bravo

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் சற்று வித்தியாசமானவர்கள்தான். மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வர ஆர்வம் காட்டமாட்டார்கள்.

ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அதற்கு நேரெதிராக இருப்பார்கள். அணி எங்கே போனாலும் ஊர் சுற்றுவதிலும், உள்ளுர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர்கள். கிறிஸ் கெயில், பிராவோ, போலார்ட் போன்றவர்கள் உள்ளுர் மக்களிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்டவர்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ட்வைன் பிராவோவுக்கு சென்னை நகரம் மிகவும் பிடிக்கும். சென்னை வந்தால் இங்குள்ள வீதிகளில் அவரை காணலாம். நேற்று தங்கியிருந்த ஹோட்டல் அறையை விட்டு வெளியே வந்த பிராவோ, தெருவோரத்தில் இருந்த தள்ளுவண்டி கடையில் மாம்பழங்கள் வாங்கி சென்றார்.

மாம்பழங்களை விற்ற பெண்மணிக்கு பிராவோ யார் என்று தெரிந்திருக்கவில்லை. அதேவேளையில் பிராவோ தள்ளு வண்டியில் மாம்பழங்கள் வாங்குவதை பார்த்த சில இளைஞர்கள் அவரிடம் பேசியதோடு ஆட்டோகிராப்பும் வாங்கினர்.

Source: Vikatan

Previous மண் எடுத்து புத்தாண்டை வரவேற்ற விவசாயிகள் திருவிழா
Next நிதியில்லாமல் தவித்த இந்திய ஐஸ் ஹாக்கி அணிக்கு கவுதம் கம்பீர் நிதியுதவி!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *