bhavani

புதுடெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஆஜராகி வரும் அரசு வழ‌க்கறிஞர் பவானிசிங்கை நீக்க கோரும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனுவை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. …

0 12
gou

நிதியில்லாமல் குவைத் செல்ல முடியாமல் தவித்து வந்த இந்திய ஐஸ்ஹாக்கி அணிக்கு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ரூ. 4 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்திய ஐஸ் ஹாக்கி அணி குவைத்தில் நடக்கும் ஆசிய சேலஞ் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. ஆனால் அதற்கு தேவையான நிதி இல்லாமல் அல்லாடி வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய ஐஸ்ஹாக்கி அணிக்கு நிதியுதவி செய்யும்படி, ஐஸ்ஹாக்கி சங்க அமைப்பே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற …

0 23
bravo

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் சற்று வித்தியாசமானவர்கள்தான். மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வர ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அதற்கு நேரெதிராக இருப்பார்கள். அணி எங்கே போனாலும் ஊர் சுற்றுவதிலும், உள்ளுர் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர்கள். கிறிஸ் கெயில், பிராவோ, போலார்ட் போன்றவர்கள் உள்ளுர் மக்களிடமும் அன்பாக பழகும் …

0 44
Festival

தமிழர்களின் பாரம்பரிய பரிமாணங்கள்தான் எத்தனை, எத்தனை…? அவற்றில் மனம் லயிக்காதவர் எவ ரேனும் உண்டா? தமிழர்களின் பண்பாடு தெரிய ஆசைப்படுபவர்கள், தயவு செய்து இதைப்படியுங்கள். நல்ல மகசூல் தர, இயற்கையை வேண்டி, மண் எடுத்து வரும் திருவிழா மேலூர் அருகேயுள்ள கீழையூரில் விவசாயிகளால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் ,மேலூர் அருகேயுள்ள கீழையூரில், தமிழ் வருடத்தை வரவேற்கும் விதமாகவும், விளை நிலத்தில் மகசூல் பெருகவும் வழிபாடு நடத்தினர். விவசாய பொருட்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபாட்டின்போது …

0 15
serial

சென்னை: ‘டப்பிங்’ தொடர்களை நிறுத்தக்கோரி, ‘சின்னத்திரை’ நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக சின்னத்திரை இயக்குனர் பாலாஜி யாதவ் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரையில் பிற மொழிகளில் தயாராகும் தொடர்கள் அதிக அளவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதால், நேரடி தமிழ் தொடர்களின் தயாரிப்பு எண்ணிக்கை குறைந்து விடுவதாகவும், இதனால் தமிழ் கலைஞர்கள் வாய்ப்பு இழப்பதாகவும் கூறப்படுகிறது. பாலாஜி யாதவின் …

0 15
khush

சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவர்களின் கருத்தை பதிவு செய்ய நடத்தப்பட்டது என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார். திராவிடர் கழகம் நேற்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது. இந்து முன்னணி, இந்து மகாசபை உள்பட 10 அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா …

0 14
nutrality

சென்னை: இந்தியாவில் இணையதள சமத்துவப் பயன்பாடு வரும் நாட்களில் இருக்குமா என்ற கேள்வி இணையதள உலகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இணைய வழி தொடர்பில் இணைய தளங்கள் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி இதுவரை அறிவுசார் விஷயங்களையும், ஆன்லைன் வர்த்தகங்களையும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் நடுநிலைமையோடு நாம் அணுகி வருகிறோம். நமக்கு என்ன தேவையோ அதை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து பயன்படுத்திவருகிறார்கள். அதாவது அனைத்து இணையதளங்களும், சரிசமமாக அணுகுவதாக இருக்கவேண்டும், சமச்சீரான வேகத்தை கொண்டதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு இணையதள …

0 13
Rajapakse

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பொதுத்தேர்தலில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், போலியான வாக்குறுதிகளை வழங்கி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர்களை தம்வசப்படுத்திக் கொள்ள அதிபர் மைத்திரிபால முனைகிறார் என்று குற்றம்சாட்டினார். ராஜபக்சே, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று அண்மையில் அதிபர் மைத்திரிபால தெரிவித்திருந்ததையும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் ராஜபக்சே, ஐக்கிய …

0 10
ind

வரும் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில், கடினமான டி பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்திய அணி இடம் பெற்றுள்ள பிரிவில் ஈரான்,ஓமன், துர்க்மெனிஸ்தான் மற்றும் குவாம் அணிகள் இடம் பெற்றுள்ளது. நேபாள அணியை வீழ்த்தியதையடுத்து இந்திய அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பிரதான தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று பிரதான சுற்றின் அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் …

0 12
Daily

ஆப்பிரிக்கா: போகோஹரம் தீவிரவாதிகள் பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக்குகிறார்கள் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்து உள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், கடந்த சில ஆண்டுகளாக போகோஹரம் தீவிரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போனோவில் உள்ள சிபோக் நகரின் ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ந்தேதி தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இந்த கடத்தல் சம்பவம் உலக நாடுகளை பெரும் …

0 14