மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், இதழியில் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார் ஜெனிபா. அதே பல்கலைக்கழகத்தில், கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றிய வந்தவர், ஜோதிமுருகன். இதனிடையே, ஜோதிமுருகனை ஜெனிபா, சஸ்பெண்ட் செய்துள்ளார். இதையடுத்து, அவர் பல்வேறு முறை ஜெனிபாவைச் சந்தித்து, மீண்டும் பணியில் சேர்க்குமாறு முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் ஜெனிபாவைச் சந்திப்பதற்காக, ஜோதிமுருகன் அவரது துறைக்குச் சென்றுள்ளார். அப்போது, சஸ்பெண்ட் செய்ததால், தனது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது என்று கூறி, அவர் ஜெனிபாவைக் …

0 0
IMG

மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் எடுபிடியாகச் செயல்படுகிறது, தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவைச் செயலாளர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், சரஸ்வதி நதியை தேடும் மத்திய அரசு, தமிழகத்தின் கீழடியில் மண்ணைப் போட்டு மூடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் பள்ளிச்சந்தையில் உள்ள கீழடி மந்தை திடலில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் கீழடி அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து விரைவாக நடத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி …

0 0
jaya

செப்டம்பர் 21-ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. பெரும்பாலான வீடுகளில் கொலு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கென விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான கொலு வைப்பதற்கென சில வரையறைகளை நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆயினும் இளம் தலைமுறை, தங்கள் கற்பனைக்கேற்ப விதவிதமான பொம்மைகளை வாங்கி வைத்து வித்தியாசமான கொலுக்களை அமைக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் சிலைகள் விற்பனைக்கு வந்தன. அவற்றை வைத்து சுதந்திரப் …

0 0
dhoni

‘கிளம்பு, கிளம்பு… இங்க எல்லாம் நிக்கக் கூடாது…’ ‘சார்… ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’ ‘பாஸ்… எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா? இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை…!’ குரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை. வழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிருந்து பிரஸ் கிளப்புக்குச் செல்லும் சாலையின் இரு மருங்கிலும் …

0 2
Thupparivaalan

மற்ற இயக்குநர்களின் படங்களில் காம்ப்ரமைஸ் இருக்கலாம். இயக்குநர் மிஷ்கினின் படம், மிஷ்கின் படம் மட்டும்தான். ஏற்கெனவே வெளியான மிஷ்கினின் படங்களில் உள்ள சில விஷயங்கள், சமீபத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்திலும் தொடர்கின்றன. இப்படம் குறித்த நேரெதிர் விமர்சனங்களுக்கு மிஷ்கினின் பதில் இது. “கதாபாத்திரங்கள் சிலையாக நிற்பது, ஹீரோ கடகடவெனப் பேசுவது… இதுதான் மிஷ்கின் பாணி. இந்த கிளிஷே காட்சிகள் இந்தப் படத்திலும் தொடர்வது ஏன்?” “நீங்க கிளிஷேனு சொல்றதுதான், என் படத்தோட ஸ்டைல். என்னோட அடையாளம். தவிர, …

0 5
dinkaran

தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்.எல்.ஏ-க்களிடம் போனில் பேசிய தினகரன், ‘தைரியமாக இருங்கள்.. நான் இருக்கிறேன்’ என்று ஆறுதல் கூறியிருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தினகரனை ஆதரித்த 22 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள், இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சொகுசு …

0 4
TTV

அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ்பெற்ற நிலையில், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்கக்கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைவதால், சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் ஆலோசனை நடத்திவருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தலைமை பிடிக்காமல் அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி, தனி அணியைத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். இந்த அணியை இணைக்க, பழனிசாமி அணித் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. …

0 6
dddd

அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஓர் அழகான குடும்பம். பெற்றோர்கள் ஐந்து பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தபோது அந்த கோர தீ விபத்து நடந்தது. அந்த விபத்தில் பெற்றோர்கள் இருவரும், அவர்கள் வசித்த வீடும் எரிந்து சாம்பலாயின. ஐந்து பிள்ளைகளும் வெவ்வேறு உறவினர்களால் தத்து எடுக்கப்பட்டு பிரிந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியர்வர்கள் ஆனதும் ஒருவரை ஒருவர் தேடி அடையாளம் கண்டு இணைந்தனர். கடைக்குட்டி லின்னை தவிர. லின்னின் கடைசி அக்கா டெஸ்ஸாவிற்கு மட்டும் எப்படியாவது …

0 2
gfdhh

மனிதர்களாகப் பிறந்தவர்கள் நிறைவேற்ற வேண்டிய, தேவ வழிபாடு, பிரம்ம வழிபாடு, பித்ரு வழிபாடு, அதிதி வழிபாடு, பூத வழிபாடு ஆகிய ஐந்து வழிபாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படும் பித்ரு வழிபாட்டை அனைவரும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசிகளை நாம் பெறவேண்டும். பித்ருலோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள், ஆடி அமாவாசையன்று நம்மை ஆசிர்வதிப்பதற்காக பூமிக்கு வரப் புறப்படுகிறார்கள். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளில் அவர்கள் பூமிக்கு அருகில் …

0 15
Mariyappan

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி அலுவலகத்துக்கு மொட்டைக் கடிதம் மூலாகக் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்தக் கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இவரின் நேர்முக உதவியாளர் விஜயக்குமார் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே அ.தி.மு.க முன்னாள் இன்னாள் நிர்வாகிகள் அனைவருமே சசிகலா ஆதரவாளர்கள்தான். ஓ.பி.எஸ் அதிமுக-வைவிட்டு வெளியேறி தர்மயுத்தம் நடத்துகிறேன் என்று சொன்னபோதுகூட கட்சி நிர்வாகிகள் ஒருசிலரைத் தவிர வேறு யாரும் …

0 6