20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!


Andhra

ஹைதராபாத்: சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றம், அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட சசிக்குமார் என்பவரது மனைவி முனியம்மாள் தொடர்ந்த வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக இன்று முனியம்மாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் விசாரணையின் போது, முனியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த என்கவுன்டர் குறித்து சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் விவரம் குறித்து தெரிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை, எப்.ஐ.ஆர் விவரங்களை நாளை தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source: Vikatan

Previous செம்மர கடத்தல் ஏரியாவில் ஷூட்டிங்: அலட்டிக்கொள்ளாத விஜய்! (ஸ்டில்ஸ்)
Next 2 ஜி ஊழல் வழக்கில் திருப்பம்: ஆ.ராசா மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *