கண்ணிவெடி தாக்குதலில் 5 போலீஸார் பலி: சத்தீஸ்கரில் தொடரும் மாவோயிஸ்ட் தாக்குதல்!


mavo

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா பகுதியில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

மாவோயிஸ்ட்டுகளின் தொடர் தாக்குதல்களால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது. கடந்த 11 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் போலம்பள்ளி பிட்மெல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிரடி படை வீரர்களை குறிவைத்து மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீஸார் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேற்றுமுன்தினம் சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டம் பர்பாஸ்பூர் பகுதியில் உள்ள இரும்புச் சுரங்கத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 17 லாரிகளை தீ வைத்து எரித்தனர். அதே நாளில் கன்கெர் மாவட்ட எல்லைப் பாதுகாப்பு படை முகாமை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார்.

இந்நிலையில், தந்தேவாடா மாவட்டம் குடிபடா கிராமத்தில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப் புக்காக மாநில அரசின் ஆயுதப் படை போலீஸார் அனுப்பப்பட்டனர்.

அதன்படி கண்ணிவெடி பாது காப்பு கவச வாகனத்தில் 12 வீரர்கள் குடிபடா கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த கண்ணி வெடியை வெடிக்க செய்தனர். இதில் கவச வாகனம் கவிழ்ந்தது. இந்தத் தாக்குதலில் 5 போலீஸார் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. களூரி கூறுகையில்,
கண்ணி வெடி தாக்குதலை நடத்தியவர்களைத் தேடி வருகிறோம் என்று தெரிவித்தார். சத்தீஸ்கரில் 72 மணி நேரத்தில் அடுத்தடுத்து நான்கு தாக்குதல்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இதையடுத்து சத்தீஸ்கர் உட்பட மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 10 மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

Source: Vikatan

Previous பால்காரர் முதல் வேலைக்காரர் வரை... கவனமாக இருங்கள்!
Next 126 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் ரத்து?

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *