போக்குவரத்து ஊழியர்களுக்கு 5.5% ஊதிய உயர்வு: தொழிற்சங்கங்கள் ஏற்க மறுப்பு!


சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 5.5 சதவீதம் ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை ஏற்க தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துள்ளன.

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், 42 தொழிற்சங்க நிர்வாகிகளுடனான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெற்றது.

unionsஇந்த பேச்சுவார்த்தையில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்துத்துறை செயலாளர் பிரபாகர்ராவ், நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் 5.5 சதவீத ஊதிய உயர்வினை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் ஏற்றுள்ள நிலையில், வேறு சில தொழிற்சங்கள் ஏற்க மறுத்துள்ளன.

இதனையடுத்து அரசின் அறிவிப்பு பற்றி மாலையில் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Source: Vikatan

Previous விவசாயிகளுக்கு இழப்பீடு ரூ. 63... ஒரு மாநில அரசின் பெருந்தன்மை!
Next 'தயவு செய்து என்னை மறந்திடு!'

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *