ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை கொல்வோம்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!


letter

சென்னை: ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை கொல்வோம் என்று கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை டி.ஜி.பி. அலுவலகம் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றுக்கு இன்று காலை தனித்தனியாக அஞ்சலில் 2 கடிதங்கள் வந்தன.

அதை பிரித்து பார்த்தபோது, அதிர்ச்சி அளிக்கும் வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.

சிவப்பு மையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில்,
“சென்னையில் 50 ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை அடையாளம் கண்டு வைத்துள்ளோம். அவர்களில் 10 பேரையாவது விரைவில் சுட்டுக்கொல்வோம்.

கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை போல சென்னையிலும் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று குண்டு வெடிக்கும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் அஞ்சலில் வந்த கடிதத்தில் 2 துண்டு சீட்டுகள் இருந்தன. ஒன்றில் மிரட்டல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. மற்றொன்றில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், டி.ஜி.பி.க்கும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் இதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியூட்டும் இந்த கடிதம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் கடிதம் வந்த கவரில், ‘பத்திரிகையாளர் மன்றம் -சென்னை’ என்று ஆங்கிலத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

எனவே சென்னையில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் யாராவது இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்து இயக்க பிரமுகர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டபோது, இது போன்ற மிரட்டல் கடிதங்கள் அடிக்கடி வந்தன. போலீஸ் நடவடிக்கைக்கு பின்னர் அது போன்ற கடிதங்கள் வருவது நின்றது.

இந்நிலையில் மீண்டும் இந்து இயக்க தலைவர்களை குறித்து கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: Vikatan

Previous அன்னா ஹசாரேவுடன் கை கோர்க்கும் தமிழக விவசாயிகள்!
Next வீடியோவை வைத்து மிரட்டி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *