ஐந்து நாள் அவசரப் பரோலில், சிறைவாசத்திலிருந்து விடுபட்டு வந்துள்ளார் சசிகலா. இது தற்காலிக விடுபடுதல் என்றாலும் ‘இச்சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடே அனுபவிக்கிறார் சசிகலா’ என்கின்றனர் அவரைச் சுற்றியுள்ள உறவினர்கள். “பெங்களூரிலிருந்து காரில் சென்னைப் பயணத்தை மேற்கண்ட அந்தக் கணத்திலேயே அவர் முகத்தில் ஏகப்பட்ட உற்சாகம். நடு சீட்டில் அமர்ந்திருந்தவர் ஜன்னலோர கண்ணாடியில் முகம் புதைத்து இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வந்துள்ளார். வழியெங்கும் ஆதரவாளர்கள் தேங்காய், பூசணி உடைத்தும், பூக்கள் தூவியும் வரவேற்பு கொடுத்தனர். வழியில் டீ கடையில் …

0 0

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, ஐந்து நாள் பரோலில் சென்னை வருகிறார். தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் அவர் தங்க உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. அதே நேரத்தில், ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா, இளவரசி, …

0 0

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று மாலைக்குள் சென்னை வர இருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ‘ டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் சசிகலா. பரோல் காலம் முடிவதற்குள் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என அவர் நம்புகிறார்’ என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, கர்நாடக உள்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இன்று அவர் பரோலில் வர இருக்கிறார். கணவர் …

0 0

“சரியா தமிழ்ப் பேசத் தெரியாமல் ‘அசத்தல் சுட்டீஸ்’ நிகழ்ச்சியில் நடுவரா உட்கார்ந்தேன். இப்போ, அந்த நிகழ்ச்சியின் ஃபைனலும் முடிஞ்சிருச்சு. குழந்தைகளின் திறமைகளில் வியந்துப்போனேன். தமிழும் நல்லாப் பேசக் கத்துகிட்டேன்” – புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார், நடிகை நித்யா ராம். சன் டிவி ‘நந்தினி’ சீரியல் நாயகியான இவர், சன் டிவி ‘அசத்தல் சுட்டீஸ்’ நிகழ்ச்சியின் நடுவராக இருந்து நிறைவு செய்திருக்கிறார். “ ‘நந்தினி’ சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச சில மாசத்திலேயே ‘அசத்தல் சுட்டீஸ்’ நிகழ்ச்சியின் நடுவரா கூப்பிட்டாங்க. …

0 0

இன்றைக்குத் தினசரி செய்திகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது `டெங்குக் காய்ச்சல்.’ தமிழக அரசு, `ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு கொசு ஒழிப்பு தினமா’க அனுசரிக்கும் அளவுக்கு இதற்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது. சென்னை எழும்பூர் அரசுக் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர், பேராசிரியர் இரா.சோமசேகர் “டெங்குக் காய்ச்சல் தடுப்பு… நம் அனைவருக்குமான பொறுப்பு (Dengue fever Control – Every one’s Responsibility)’’ என்கிறார். மேலும் டெங்குக் காய்ச்சல், எப்படிப் பரவுகிறது, அதற்கான சிகிச்சைகள், அதைத் …

0 0

வல்லரசு நாடுகள் எல்லாமே நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றன. அவை தொழில்நுட்ப வசதிகளில் கில்லி. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலவ விடப்பட்ட பல நீர்மூழ்கிக் கப்பல்களை அதே தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தேடவும் வைத்திருக்கின்றன. சிலவற்றைக் கண்டுபிடித்தார்கள். சிலவற்றை குற்றுயிரும் கொலையுயிருமாக மீட்டார்கள். தேடியது போதுமென சில கப்பல்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அப்படி தொலைந்து போய், பிறகு தேடிக் கண்டுபிடித்து கடலுக்குள் அப்படியே விட்டுவிட்டு வந்த ஒரு கப்பல்தான் “இன்விசிபிள் குர்ஸ்க்” குர்ஸ்க், நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்யாவுக்குச் சொந்தமானது. அணுசக்தியால் …

0 0

“அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். அந்த எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. போர் வரட்டும்” அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்கள் மத்தியில் பேசினார். இதன்மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார் என்பது தெரியவந்தது. ஆனால், நடிகர் கமல் களத்தில் இறங்கி மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசியும், டுவிட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டும் வருகிறார். கமலின் கருத்துகளை எதிர்க்கும்விதமாக தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார், “அரசியலுக்கு வந்துவிட்டு கமல் கருத்துகளைத் தெரிவிக்கட்டும்” என்றார். …

0 0

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் விவரங்கள் வருமாறு… ”2016-ம் ஆண்டு, செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.15-க்கு போயஸ் கார்டனிலிருந்து ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை’ என்று தொலைபேசி அழைப்பு வந்ததும், அப்போலோ மருத்துவமனையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றுள்ளது. முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா, மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். அவரைத் தட்டி எழுப்பியபோது, எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவு …

0 0

தனது சூப்பர் டூப்பர் அறிவுத்திறனைக் கொண்டு மக்களை பாதுகாக்கும் ஒரு சூப்பர் ஹீரோ. அவனுக்கு சவாலாக உருவெடுக்கும் ஒரு சூப்பர் வில்லன். அவனை பிடிக்க ஹீரோ பின்னும் டெக்னிகல் வலைகள்தான் இந்த‌ ‘ஸ்பை’டர். சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் சமூகவிரோதிகளின் சதி திட்டங்களை கண்காணிக்க, தொலைதொடர்பு சாதனங்களை ஒட்டுக் கேட்கும் `மொபைல் டேப்பிங்’ வேலை பார்க்கிறார் சிவா ( மகேஷ் பாபு ). இடையே, பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு வரும் பிரச்னைகளையும் கண்டுபிடித்து தடுக்கிறார். …

0 0

நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்தோம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் சசிகலாவைத் தவிர வேறு யாரும் உடனிருந்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொன்னையன் உள்ளிட்ட பலர் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் மரணம் தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. …

0 0